பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இலச் செல்வி

சோபையிலே அவன் ஈடுபட்டான். பின்பு ஒவ்வொன்றை யும் தனித்தனியே சிந்தித்துப் பார்க்கவும் தொடங்கினன். அழகும் தனியாக அவனை ஆட்கொண்டது. கலைப்பித்தன் ஆகையில்ை மழலைச்சிலம்பினிடம் அவனுக்குண்டான அழகுக் காதல் அவளுடைய கலையின்பத்தை நுகர்வதைக் குறைக்கவில்லை.

அவளே மன்னன் முதலில் தெரிந்துகொண்ட பிறகு அடிக்கடி அவளுடைய நடனத்தைக் கண்டு இன்புறலா ஞன். கங்கைகொண்ட சோழபுரத்தில் முன்பெல்லாம் திருக்கோயிலில்தான் நாட்டியம் நடைபெறும். எப்பொழு தேனும் அரண்மனையில் நிகழ்வதுண்டு. இந்த மன்னனே, இாவும் பகலும் எந்த கோமும் கலையின் பத்தில் மூழ்கிக் கிடப்பவன். காலமறிந்து சம்பிரதாயமறிந்து திருக்கோயி லில் நடனம் சிகழவேண்டும். கலைக்கு இப்படி வரம்பு கட்டக் கூடாது என்று எண்ணிய மன்னன், தனியாக ஒர் ஆடாங்கை நகரத்தில் அமைத்தான். அங்கே அடிக்கடி காட்டியம் நடைபெற்றது. வேறு சிலரும் அங்கே நடிப் பது உண்டானலும், பெரும்பாலும் மழலைச்சிலம்பே ஆடரங்கின் முக்கியமான விக்கிரகமானள். , - . . .

அதோடு, அவள் ஈசுவரன் கோவிலுக்கே நடனம் செய்யப் போவதில்லை. அவள் தாய் மாத்திரம் போவாள். அரசன் அவளுடைய கலாவிலாசத்துக்குத் திருக்கோயில் தகுந்த இடமன்றென்று நினைத்தான். காரணம் அவனுக் குக் கடவுள் பக்தியைக் காட்டிலும் கலப்பித்து விஞ்சி கின்றதுதான்.

சில காலத்திற்குள் மழலைச்சிலம்பு மன்னனுடைய பரிபூரணமான கருணைக்கு இலக்காள்ை. அவனுடைய அந்தப்பு மகளிர் கூட்டத்தில் அவள் ஒருத்தியாளுள்.