பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் 85.

மாதிரி வர்ணமும் இந்த முறையான சித்திரமும் இனி வாப் போகின்றனவா, என்ன? நாம் எத்தனை வஸ்துக்களை இழந்துவிட்டோம் ஊர் ஊராகத் தாண்டவமாடிய கலை கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் மங்கிப் போயி, னவே! இனி நல்ல காலம் வருமா? பழைய ஓவியக் கலை தலையெடுக்குமா?” -

கோபத்திலே ஆரம்பித்த அந்தக் கலைப்பித்தர் பிரசங் கம் இரக்கத்திலே இறங்கியது. . - y

'கலையைப்பற்றிச் சொல்வதை நிறுத்தி இந்தச் சித்திரத்தைப் பூர்ணமாக்கித் தரமுடியுமா என்பதைக் சொல்லுங்களையா!' என்று ஐமீன்தார் இடையிலே கேட்க வேண்டியதாயிற்று. -

"அதைக்கான்சொல்ல வருகிறேன். இந்தச் சித்திசத் தைப் பூர்த்தி பண்ணிக் கொடுக்கிறேன். ஆனல் எனக்கு இரண்டு மாசம் அவகாசம் கொடுக்கவேண்டும். இந்தச் சித்திரத்தைப்போல எழுதி விடுவது பிரமாதமல்ல; இந்த வர்ணத்தைப்போல அமைப்பதுதான் கடினம். அதற்குத் தான் காலம் ஆகும்.” - -

'இரண்டு மாசம் என்ன? மூன்று மாசங்களாகட் டும். அந்த மூன்று மாசமும் நீங்கள். இந்த அரண்மனை யிலேயே இருக்கலாம். உங்களுக்கு வேண்டிய சகல செளகரியங்களையும் இங்கே அமைத்துத் தருகிறேன். நிதானமாக வேலை செய்யுங்கள். படம் எப்படியாவது, ஆர்னமால்ை போதும்.” -

ஜமீன்தாருடைய வார் த்தை களி ல் ஆர்வம் பொங்கியது.

இங்கேயா? அதெல்லாம். முடியாது. சான் வேலை செய்துகொண்டே இருப்பேன். யாரையாவது தாங்கன்