பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கலைச் செல்வி

கூட்டிக்கொண்டு வருவீர்கள். எனக்கு வேலை ஒடாது. என்னுடைய சொந்த இடத்தில்தான் எனக்கு வேலை ஒடும்” என்று உறுதியாகச் சொன்னன் சித்திரகாசன்.

மூலப் பொருளே போய்விட்டால் என்ன செய்வது!’ என்று சிந்தித்தார் ஜமீன்தார்.

தாங்கள் இந்தப் படத்தை கான் கொண்டு போனல் திரும்பி வராதோ என்று யோசிக்கிறீர்கள்போல் இருக் கிறது. அப்படி கம்பாவிட்டால் நான் போகிறேன். கலைஞனிடத்தில் நம்பிக்கை வைத்தால்தான் கலை பரி பூர்ணம் அடையும். ஜமீன்தார் யோசித்துப் பார்த்தார். வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. அந்தக் கிழியைக் கொடுத்து, "ஜாக்கிரதை நான் இதைக் குலதனமாகப் பாதுகாத்து வருகிறேன். இதைப் பார்த்து வேறு ஒரு படம் எழுதவேண்டும்” என்று சொல்லிச் சரியாக இரண் டாவது மாதத்தில் கடைசி நாளில் படத்தைத் தரவேண்டு மென்று அவனிடமிருந்து வாக்குறுதி வாங்கிக்கொண்டு ஜமீன்தார் அவனே அனுப்பினர்.

- 3

சரியாக இரண்டு மாதம் ஆவதற்குள் ஜமீன்தார் காலந்து முறை சித்திரகாரன் ஊருக்குப் போய் விசாரித்து விட்டுவந்தார். அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் விசாரித்தபோதெல்லாம் அந்த ஒவியக்கலைஞன் அவர் அளித்த அரைகுறைப் படத்தை மாத்திரம் காட்டி அது பத்திரமாக இருப்பதைத் தெரிவித்தான். 'உங்கள். படம் எந்தமட்டில் இருக்கிறது' என்று கேட்டால், வேலை கடந்துகொண்டிருக்கிறது" என்று சொல்வான். கடந்த வேலையைக் காட்டமாட்டான். மூன்ரும் முறை ஜமீன்தார்.