பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ கலைச் செல்வி

பல படியாக அந்தக் கலைஞனைப் பாராட்டினர். ஆயிர ரூபாய் சம்மானத்தோடு மற்ருேர் ஐந்தாறு ரூபாய் சேர்த்து வழங்கினர். .

புதிய படம் உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பழைய படத்தின் புத்துருவம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த முழு உருவத் தையும் பார்த்த காமைய நாயக்கர் சொக்கிப் போளுர், “என்ன கம்பீரம் என்ன பார்வை! அந்தக் கண்களில் தான் என்ன ஒளி ' -

“இந்த அழகிய படத்தைக் தக்க இடத்தில் வைக்க வேண்டும். அரண்மனையின் நடுக்கூடத்தில் எல்லோர் கண்ணிலும் தெரியும்படி வைக்கவேண்டும். வந்தவர் களெல்லாம் கண்டு மகிழ வேண்டும்" என்று ம்ேலும் மேலும் கற்பனை செய்துகொண்டு போளுர் காமைய தாயக்கர், - -

ஒரு நல்ல நாளில் பல பிரபல கனவான்களின் முன்னிலையில் படம் அரண்மனைக் கூடத்தில் திறந்து, - வைக்கப்பெற்றது. படத்தைப் பார்த்தவர்களெல்லோரும் அதை வியந்து ஜமீன்தாரின் சிரத்தையைப் பாராட்டி ஞர்கள். கிழவிகள் கூடப் பார்த்து மகிழ்ந்தார்கள். வெளி யூரிலிருந்து கூழைப்பட்டிக்கு யார் புதிதாக வந்தாலும் 'காமைய பாண்டிய மகாராஜா'வின் படத்தைப் பார்க்கா மல் போவதில்லை. அதைத் திறந்து வைத்தது முதல் காமைய நாயக்கருடைய வியாபகங்கூட அதிகமாயிற் று. பழைய படத்தையும் அவர் மிகவும் ஜாக்கிரதை பண்ணிப் பெட்டியில் வைத்திருந்தார். புதிய படத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அடைந்தார். -