பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் 98. சேர்ந்துகொண்டது. படம் கிடைத்த சந்தோஷத்தில் அந்தச் சிறு துணுக்கிலுள்ள வாக்கியங்களினுள்ளே புகுந்து பார்க்கும் திறம் அவர் பால் ஏற்படவில்லை. அந்த மர்மம் விளங்கினல், காமைய பாண்டியருடைய உத்தம குணம் ஒன்று வெளியாகுமென்று எதிர்பார்த்திருந்தார் ஜமீன் தார். . -

5 . . . . . . . . அன்று, எ ன் று ம் இல்லாதபடி முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந் தார் ஆராய்ச்சிக் கார். அவருடைய இயல்பான உற்சாகத்தை அன்று காணவில்லை. வழக்கம்போல் ஜமீன்தார், “இன்று ஏதா வது விசேஷம் உண்டா? என்று கேட்டார். ஆராய்ச்சிக் காரர் சட்டென்று பதில் சொல்லவில்லை. தயங்கித் தயங்கி . சின்ருர், பிறகு, "எங்கேயாவது உட்கார்ந்துகொண்டு

பேசலாமே என்ருர்,

'ஆஹா, வாருங்கள்; என்னுடைய அறைக்குப் போகலாம்” என்று ஜமீன்தார்.அழைத்துச் சென்ருர், - இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள். ஆராய்ச்சிக் கார் மெல்ல ஆரம்பித்தார்: “இன்றைக்கு ஒரு புதிய

விஷயத்தைக் கண்டுபிடித்தேன்.'

"அதை முன்பே சொல்லவில்லையே'. என்று தம் பரபரப்பைக் காட்டினர் ஜமீன்தார்.

"ஆல்ை, அது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக் கக்கூடிய செய்தி அல்ல. ஒரு வார காலமாக ஓர் ஏட்டுச் சுவடியின் சிதறுண்ட எடுகளைப் பொறுக்கிச் சேர்க்க முயன்றேன். சேர்க்காற்போல அகப்படவில்லை. இரண்டு. ஏடுகள் மாத்திரம் துரகிருஷ்டவசமாக ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தன. அவற்றை எண்ணெய் போட்டுப்