பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీడ్ల கலச் செல்வி

பிரித்துப் பார்த்தேன். வேறு சில குறிப்புகளையும் பார்த்தேன். அவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தபோது ஒர் உண்மை வெளியாயிற்று. சரித்திரக்காரன் உண்மையை வெளியிடக் கடமைப்பட்டவன். அது இனிய செய்தி யானுலும் மனசுக்குக் கஷ்டத்தைத் தருவதானுலும் உண்மையை உள்ளவாறே சொல்லவேண்டும்.”

'நானும் உண்மையைத்தான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எங்கள் பரம்பரையில் எல்லோரும் நல்ல வர்களென்று கான் குருட்டுத்தனமாக எண்ணிக்கொள்ள வில்லை.அவர்களுக்குள் சிலர் மிகவும் இழித்த சுபாவமுடைய வராக இருந்திருக்கலாம். சிலர் குற்றவாளிகளாக இருக் கலாம். அதனுல் என்ன? சரித்திரத்தை நாம் தெரிந்து கொன்னத்தான் வேண்டும்.”

“அது வாஸ்தவத்தான். ஆளுல் நான் கண்டுபிடித்த விஷயம் அந்த மாதிரியானதல்ல. உங்கள் ஆசைக்குகந்த பொருள் பற்றியது. அதைக் கேட்டால் நீங்கள் மிக்க ஏமாற்றத்தை அடைவீர்கள்.” - ‘'எதுவாயிருந்தாலும் சொல்லிவிடுங்கள். நான் கேட்

கத் தயாராயிருக்கிறேன்." . . . "சொல்லுகிறேன். கூடத்தில் வைத்திருக்கிறீர்களே, அந்தப் படம் நீங்கள் கினைத்தபடி காமைய பாண்டிய ருடையதல்ல'

'என்ன!' ஜமீன்தார் திடுக்கிட்டார். நான் கண் டெடுத்தது அவர் படம் அல்லவா?” என்று கேட்டார்.

தாங்கள் கண்டெடுத்த பழைய படம் காமைய பாண்டியருடையதுதான்; அகில் சந்தேகமே யில்லை. ஆல்ை இத்தப் புதிய படம் அவருடையது அல்ல."

இரண்டும் ஒன்றுதானே? . 'அல்ல, இரண்டும் வெவ்வேறு."