பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33


Disapproval: ஏற்றுக்கொள்ளாமை.

Doctrine of lapse: அவகாசியிலிக் கொள்கை: நாடிழக்கும் கொள்கை,

Double government: ஈர் ஆட்சி,

Doctor of laws: சட்ட வல்லுநர்,

Dowry: சீதனம்; சீர்வரிசை

Draconic: கடுமையான (சட்டம்.)

Drastio: தீவிரமான.

Draft: வரைவு; நகல்.

Draper: ஆடை வணிகர்.

Dynastic contest: அரச பரம்பரைப் போராட்டம், பட்டப்போட்டி

Dynastic marriage: (அரசர்) குலத்திருமணம்.

Dynasty: அரச மரபு; வமிசம்.




E


Earthenware:மட்பாண்டம்.

Earl: கோமான் ; எர்ல் பிரபு.

East India Company:கிழக்கிந்திய வணிகக் கூட்டுக்குழு.

Ecclesiastical: சமயம் சார்ந்த திருசசபைக்குறிய.

Educating the public: பொது மக்கட்கு அறிவுறுத்தல்.

Effects of the conquest: வெற்றி விளைவுகள்.

Eloquence: சொல்வன்மை.

Elysium: இன்ப உலகம் ; துறக்கம்.

Emancipation:விடுதலை.

Emigrants: பிறநாட்டில் குடியேறுவோர்.

Emigration:வெளியேறுவோர், வெளிக்குடியேற்றம்.

Empire:பேரரசு.

Embodied in anact: சட்டத்தில் அமைத்தல் .

Employer:வேலை கொடுப்போன்

Enfranchisement:வாக்குரிமை அளித்தல்.

Entrenchments: போர்க்கள அகழிகள்.

Encroachment:கவர்தல்.

Enblock:மொத்தமாக.

Entertainment: பொழுது போக்கு.

Endowment: கொடை, அறக் கட்டளை.

Engineer: பொறியாளர், பொறியமைப்பாளர்.

Enunciation: தெளிவுக் கூற்று.

Encyclopaedia: கலைக் களஞ்சியம், அறிவுக் களஞ்சியம், பல் பொருள் தொகுதி.