பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

A

Accession : அரசெய்தல் ; பதவிக்கு வருதல்.

Act of settlement : அரசுரிமை நிர்ணயச் சட்டம்.

Act of supremacy : ஆதிக்கச் சட்டம்; முதன்மைச் சட்டம்.

Annates : அன்னேட்ஸ; முதலாண்டு வருமானம் (கிறித்துவமத்த தலைவரின முதலாண்டு வரும்படி).

Act of uniformity : ஒரு வழிபாட்டுச் சட்டம்; ஒரே தன்மையை வற்புறுத்தும் சட்டம்.

Act of union : ஐக்கியச் சட்டம்.

Alliance, triple : முக்கூட்டு உடன்படிக்கை.

Allies : நேசநாடுகள்.

Ancien Regime : பிரெஞ்சுப்புரட்சிக்கு முந்திய மன்னராட்சி.

American war of Independence : அமெரிக்க உரிமைப்போர்.

Amendment : திருத்தம்

Anglican church : ஆங்கிலகதிருச்சபை.

Anglican party : ஆங்கிலிகன மதக் கட்சி.

Armada ; Spanish Armada : போர்க்கலங்கள்; ஸ்பானியக்கப் பறபடை.

Armed neutrality : படைதரித்த நடுநிலைமை; போர்க் கோல நடுநிலைமை.

Arminianism : ஆரமீனிய சமயம் ; ஆர்மீனிய பேதம்.

Armistice : தற்காலப்போர் நிறுத்தம்.

Assembly : அவை ; சபை.

Arch-Bishop : அதிமேற்றி ராணியார்.

Ascetic-religious exercise : துறவறச்சார்பான சமயப்பயிற்சி.

Attainder : அரச துரோகத்துக்காக உரிமை நீக்குதல்.

Austrian succession war : ஆஸ்திரிய வாரிசு உரிமைப்போர் ; ஆஸ்திரிய அரசுரிமைப்போர்.

Autocracy : தனிவல்லாட்சி.

Autonomy : தனி உரிமை ஆட்சி.

Auxiliary forces : துணைப்படைகள்.

Aviation : வான்போக்குவரவு.

Antithesis of nation-State : தேசீய அரசிற்கு முரண்.

Apprenticeship in liberty : உரிமைத் துறையில் பயிற்சிக் காலம்; உரிமை வாழ்வுப் பயிற்சி.

Aristocracy : உயர்குடி; உயர்குடி ஆட்சி (பிரபு நாயகம்).

Award : தீர்ப்பு, (மத்தியஸ்தர்), நடுக்கூற்று.