பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60




P


Pacifists: சமாதான வாதிகள் அமைதிக் கோட்பாட்டினர்.

Parlimentary Session: பார்லிமெண்டுக கூட்டக்காலம்.

Parlimentary enquiry: பார்லிமெண்டு ஆய்வு.

Peers: பிரபுக்கள், திருமக்கள்.

Penal laws: தண்டனைச்சட்டங்கள்,

Petition of Right: உரிமை விண்ணப்பம் (மனு)

Petty Jury: சிறிய தீாப்புச் சான்றாளர் குழு, சிறு ஜுரி, சிறு தீர்ப்புதவியாளர்,

Peace maker: அமைதி ஆக்குவோர்,

Peerage Bill: பிரபுக்கள் தொகுதியைப்பற்றிய மசோதா, பிரபுத்துவ மசோதா.

Personal discretion:தன்விருப்புரிமை, தன்முடிபு.

Pilgrimage of grace: அருள்யாத்திரை.

Pitt's India Act: பிட் இந்தியச் சட்டம்.

Pleas of the Crown: அரசுவழக்குகள்.

Place Act: பதவிச் சட்டம்.

Pocket Borough: கைவசத்தொகுதி; பாக்கெட்பரோ.

Policy of association: கலந்தாலோசிக்கும் கொள்கை,

Political traditions: அரசியல் மரபொழுக்கங்கள், (சம்பிரதாயங்கள்).

Polling: வாக்கெடுத்தல.

Poor-House: இரவலர் சாலை,

Poor Law, the: இரவலர் சட்டம்.

Popish plot: போப்பினர் சதி.

Poundage: பவுண்டு கட்டணம்.

Power loom: இயந்திரத தறி.

Polite Society: கண்ணியமுள்ள சமூகம்.

Popular Despotism: குடிதழீஇய வல்லாட்சி,

Policy of power: அதிகார வகைக் கொள்கை.

Poor relief: வறுமை நிவாரணம்.

Prerogatives: தனிச்சிறப்புரிமைகள்.

Primogeniture: மூத்தமகன் சொத்துரிமை முறை.

Proclamation: வெளிப்படை அறிவிப்பு, பேரறிக்கை, பரவறிக்கை .

Pragmatic sanction: பேரரசர் தனிக் கட்டளை,

Preamble: தோற்றுவாய், முகவுரை.

Pretender: போலிவாதி (புரட்டன்).

Protectorate parliament: காப்பாளர் பார்லிமெண்ட்,

Protector: காப்பாளர்.

Presbyterianism: பிரஸ்பிடீரிய சமயம், மூத்தோர் ஆட்சிககொள்கை, சமயசங்கக் குழு ஆட்சி,