பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கலைஞன் தியாகம்

'அப்பா' என்று கூப்பிட்டுக்கொண்டே அங்கே ஓர் இளைஞன் தோன்றின்ை.

'முருகா, அதை முடித்துவிட்டாயா?’ என்று அன்பொழுகிய குரலிலே கேட்டான் கிழவன்.

காய வைத்திருக்கிறேன். இதற்குள் காய்க் திருக்கும். இதோ எடுத்து வருகிறேன்' என்று ஒடிப்போய் ஒரு பொம்மையைக் கொண்டுவந்து கிழவன்முன் வைத்தான்் இளைஞன். -

அதைக் கிழவன் பார்த்தான்்; கண்ணே மலர்த்தி நன்ருகப் பார்த்தான்். ஓர் அழகிய இளநங்கையின் உருவம் அது. அவளது ஒய்யாரச் சிரிப்பின் சோபையை அது கன்ருக எடுத்துக் காட்டியது. கிழக் கலைஞன் அந்த வர்ண விசித்திரத்திலே புதைந்திருந்த ஆற்றலே அளவிட்டுப் பார்த்தான்். அவனுடைய உள்ளத்திலே பலபல உணர்ச்சிகள் உண்டாயின. ஒரு பெருமூச்சு விட்டான். அதில் எத்தனே உஷ்ணம்! - . . . -

நன்ருக இருக்கவேண்டும் உனக்கு எல்லாவித வாழ்வும் கிடைக்கவேண்டும்' என்று கிழவன் வாழ்த்தத் தொடங்கினன்.

போதும் அப்பா எனக்கு வேலை இருக்கிறது. நான் போகிறேன். அண்ணன் ஒரு வேலை சொன்னன்; செய்யவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே முருகன் வீட்டின் முற்றத்திற்குப் போய்விட்டான். பொம்மைக்காரக் கிழவனுக்கு முருகன் பிள்ளை யல்ல. அவன் ஒரு வளர்ப்புப் பிள்ளே. கிழவனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/10&oldid=686172" இலிருந்து மீள்விக்கப்பட்டது