பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம் 97

நாராயணையர் நினைத்ததுண்டு. ஏதோ அரைவயிறு கஞ்சிக்கு அப்பா வைத்திருக்கிரு.ர். ஸ்கான ஸங்தி செய்துகொண்டு அறுபது வயசுக்குமேல் பண்ணுகிற ஜபதபங்களே காற்பது வயசிலேயே பண்ணில்ைதான்் என்ன?’ என்று எண்ணுவார். தம்முடைய அருமை யான மகள் அம்புஜம் எதிரே வந்துவிடுவாள். அப்போது அவருடைய கிராமவாஸ் ஞாபகம் போய் விடும். 'இவளுக்கு கல்ல இடம் அகப்படவேண்டும். அதற்காவது இந்தப் பலகையைத் தொங்கவிட்டுக் கொண்டு இந்த ஊரில் இருக்கவேண்டும். கிராம வாஸ்த்துக்குப் போய்விட்டால் கல்ல மாப்பிள்ளையாக எங்கே அகப்படப் போகிருன்?’ என்று மனஸ்-க் குள்ளே சொல்லிப் பெருமூச்சு விடுவார்.

இப்படி அவருடைய தினசரி வாழ்க்கையில் அவருக்கு உண்டாகும் பகற்கனவுகள் கலேவதும் கூடுவதுமாக இருங்தன. வாசலில் தொங்கும் பலகை தொங்கிக்கொண்டுதான்் இருந்தது. வெயில் பட்டுப் பட்டு அதில் இருந்த எழுத்துக்கள் வெடித்து மங்கத் தொடங்கின. ஊரிலிருந்து வரும் கெல்லேயும் திருச்சி யில் கிடைக்கும் பணத்தையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு வகையாகக் காலசேஷபத்தை நடத்தி வங்தார். -

அவர் வீட்டில் லக்ஷ்மீகரத்துக்குக் குறைவொன் றும் இல்லை. அம்புஜத்தின் பூத்தையற் படங்கள் மாதத்துக்கு ஒன்ருகச் சுவரை அலங்கரித்தன. அம் மணியம்மாளுடைய நாகரிக வாழ்வுக்குச் சிறிதும் குறைவு வரவில்லை. வீட்டில் சமையற்காரன் சமையல்; ஆள்காரன் பசுவைப் பாதுகாத்துக் கறந்து

7 -