பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கலைஞன் தியாகம்

பெறும்" என்று அவன் பதிலுக்கு ஸ்தோத்திரம் செய்தான்். - -

ஜமீன்தார் தமக்கு வேண்டுமென்று நான்கு படங்களைத் தெரிந்தெடுத்தார். ஒவ்வொரு படத்திற் கும் ஐந்நூறு ரூபாய் தருவதாக வாக்களித்தார். பிறகு, 'இவ்வளவுதான்ே? இங்தமாதிரி வேறு படங் கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார்.

'இன்னும் ஒரு படம் இருக்கிறது. இது வரையில் நான் எழுதிய படங்களில் அதைப்போல வேருென்று இல்லை. என்னேயே மயக்கும் சக்தி பொருங்தியது அப்படம். அதை இதுவரையில் யாருக்கும் காட்டவில்லே. அதை வாங்குவதற்குரிய செல்வர்கள் இல்லை. என் வாழ்வு முழுவதும் உழைத் தாலும் அப்படி ஒரு படம் அமைவதென்றால் மிகவும் சிரம சாத்தியம்' என்று தாமோதரன் அடுக்கிக் கொண்டே போனன்.

"யாருக்கும் காட்டக்கூடாதென்ற விர த. முண்டோ?” என்று ஆவலோடு கேட்டார் ஜமீன்தார். 'அப்படி ஒன்றும் இல்லை. எல்லோருக்கும் காட் டிக்கொண்டே இருந்தால் அதன் மதிப்புக் குறைந்து விடும். அதைப் பார்ப்பதற்குக்கூடக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நானே என் கைத்திறமை யைப் புகழ்ந்துகொள்வதாக நீங்கள் எண்ணவேண் டாம்.” - - -

"அப்படியானல் நான் பார்ப்பதில் தடை ஒன்று மில்லையே? அதை யாருக்காவது கொடுக்கலாமென்ற உத்தேசம் உண்டோ?' - .