பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கலைஞன் தியாகம்

இருவரும் பின்னலே உள்ள தோட்டத்தை அடைந்தார்கள். அதில் ஒரு சிறிய காட்டைப்போல மரங்கள் அடர்ந்திருந்தன.

'உண்மையைச் சொல்லிவிடுங்கள்: இ ங் த ப் பெண்ணை நீங்கள் எங்கே பார்த்தீர்கள்?’ என்று ஜமீன்தார் கேட்டார்.

தாமோதரன் என்ன சொல்லுவான்? அந்தமாதிரி உண்மையில் ஒருத்தி இருக்கிருளென்றும் அவளே அடைவதற்கு முயலவேண்டுமென்றும் ஜமீன்தார் எண்ணியிருப்பதாக அவன் நினைத்தான்். காமப் பித்தர்களுடைய இயல்புகளையும் ஜமீன்தார்கள் சுகபோகத்தின் பொருட்டுச் செய்யும் பலவகைச் செயல்களையும் அறிந்தவன் அவன்.

"சித்திரகாரனுக்குப் பெண்கள் பஞ்சமா? அவன் கினேத்தால் இந்த உலகத்திலே இல்லாத அபூர்வ சிருஷ்டிகளை உண்டாக்கிவிடலாமே. நீங்கள் இதை உண்மையான பெண் ஒருத்தியின் பட மென்று எண்ணியிருப்பது கண்டு ஆச்சரியப்படுகிறேன்!”

இதைச் சொல்லிக்கொண்டிருக்கையிலே ஜமீன்' தார் சடக்கென்று தம் பையிலிருந்து ஒரு ரிவால்வரை எடுத்துத் தாமோதரன் முகத்துக்கு எதிரில் நீட்டினர். "இந்தாரும் என்னே ஏமாற்றப் பார்க்காதேயும். உண்மையுைச் சொல்லிவிடும். இவளே எ ங் கே பார்த்தீர்?' என்று கோபத்தோடு கேட்டார்.

தாமோதரன் தைரியசாலி; சமயத்தில் சோர் வடையமாட்டான். - -

“உங்கள் கைத்துப்பாக்கியை முதலில் சட்டைப் பையில் போடுங்கள். அப்புறம் பேசலாம்.' -