பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம் 121

ஜமீன்தார். அப்படியே செய்தார். 'இந்தப் படத்தில் இருப்பது உலகத்திலுள்ள எந்தப் பெண்ணின் உருவமும் அல்லவென்று சத்தி யம் செய்கிறேன். பெரிய அறிவாளியாகிய நீங்கள் இவ்வளவு பதற்றமாக நடக்கக்கூடாது. நீங்கள் உங்களுக்கே அபாயம் தேடிக்கொள்ள நினைத்தீர்கள். தாமோதரன் உலகமறிந்த ஒரு சித்திரகாரனென் பதை நீங்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. என் படத்தைத் தந்துவிடுங்கள். உங்கள் பணம் எனக்கு வேண்டாம்!”

ஜமீன்தார் பெருமூச்சு விட்டார்; சிறிதுநேரம் பூமியை நோக்கியபடி நின்றார். அவர் கைகள் கடுங் கின. 'இங்கே பாரும். அந்தப் படத்தை இனி மேல் யாரும் பார்க்கக்கூடாது. எனக்கு எப்போது விற்றிரோ அப்போதே அது என்னுடையதாகிவிட் டது. அந்தப் படத்தைப்பற்றியோ இ ப் போது நடந்த காரியங்களைப்பற்றியோ இனிமேல் கினேக்க வேண்டாம். யாரிடமும் பிரஸ்தாபிக்கக்கூடாது. எல்லாவற்றையும் மறந்துவிடும். உமக்கு இன்னும் ஓர் ஆயிரருபாய்க்குச் செக் அனுப்பிவிடுகிறேன்” என்று சொல்லி அவர் போய்விட்டார். - தாமோதரன் வீடுவந்து சேர்ந்தான்். மறுகாளே அவனுக்கு மற்ருேர் ஆயிரருபாய்க்குச் செக் வந்தது.

3

ஐந்து வருவுங்கள் கழிந்தன. தாமோதரன் பெரிய செல்வனகிவிட்டான். * நூற்றுக்கணக்கான