பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கலைஞன் தியாகம்

ஒர் ஆசை தோற்றியது. மறுபடியும் அங்த முகம் மாத்திரமாவது எழுதித் தரவேண்டும். இதுதான்் கான் கேட்கும் பிச்சை.

米 来 # - ஜமீன்தார் இந்த வரலாற்றைக் கூறும்போது இடையிடையே கண்ணிர் விட்டார். பே சாம ல் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தான்் தாமோ தரன்.

"நான் கொடுத்த அந்தப் படம் என் கற்பனை யிலிருந்து எழுங்தது. அதே கற்பனையை மீண்டும் அப்படியே வருவிக்கமுடியுமா? உங்கள் மனேவியின் போட்டோ இருந்தால், அதைப் பார்த்து வேண்டு மானல் எழுதித் தருகிறேன்.”

"அதுதான்ே இல்லே! உங்கள் மனத்தில் அந்தப் படத்தை எண்ணிப் பார்த்து முகம் மாத்திரம் எழுதிக் கொடுங்களேன்.” -

'அந்த முகத்தை கான் கண்ணுல் கண்டிருந்தால் ஞாபகத்துக்கு வரும். என் கனவு அது. ஐந்து வருஷங்களுக்குமுன் கண்ட கனவை அப்படியே இன்றும் காணமுடியுமா? ஆனலும் பார்க்கிறேன்.”

来 来 来源

அன்றுமுதல் தாமோதரன் நூறுபடங்களுக்கு மேல் எழுதிவிட்டான். அந்த நூறு முகங்களிலும் அந்த முகம் இல்லே. பாவம் ஜமீன்தார் வாரங் தவருமல் வந்துவிடுவார். அந்த முகத்தை மீண்டும் காண்பேன! என்று அவர் உருகுகிருர், தாமோதரன் தான்் என்ன செய்வான்! அவன் ஆயிரம் முகம் எழுதத் தயார்; ஆனால் அந்த முகம் வரவில்லையே!