பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகாரச் சாமி

கரு கும் என்ற இருட்டில் மினுக்கு மினுக் கென்று ஒரு சிமினி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் குடிசையிலிருந்து அங்த முனகல் சப்தம் வந்து கொண்டிருந்தது. "ஐயோ! அப்பா, ஆத்தே, சாமீ! கடவுளே! ஐயோ! என் உசிர் போவாதா? சாமீ, என்னே வாரிக்கொண்டு போயிடேன். ஐயோ! தாங்கலையே” என்ற வார்த்தைகள் விட்டு விட்டுக் கேட்டன. அந்தக் குரல் ஒரு பெண்ணினது குரல் போலத் தோன்றியது. அந்த அந்தகாரத்தில் வாயு பகவானத் தவிர வேறு யாரும் அங்தக் குடிசைக் குள்ளே போய் விசாரிக்க முன் வரவில்லே. அவர்கூட, தடபுடலாக உள்ளே நுழைந்தால் தகரச் சிமினியி லுள்ள சுடர் பயந்து மறைந்து விடுமோவென்று எண்ணினவர் போல மெல்ல நுழைந்து கொண்டிருங் தார். வானம் மேகங்களால் சூழப்பட்டு ஒரு கறுப்பு மேலாப்பைப் போர்த்திக் கொண்டிருந்தது.

அந்த அவஸ்தைக் குரலுக்கு இடையே வேறொரு குரலும் கேட்டது: “ரொம்ப வலிக்குதா அம்மா? ரத்தம் வருதே, ஐயோ!' என்று ஒர் இளங் குரல் முன் கூறிய குரலுக்கு நடு நடுவே மெல்லிய இழை போலக் கேட்டது. ஸங்தேகமே இல்லை; அது ஒரு சிறு குழங்தையின் குரல்தான்்.