பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலங்காயம் 141

இல்லாத கிராமங்களுக்குச் சென்று தங்கள் உபதேசத் தைப் பரப்பி வந்தார்கள். அவர்கள் இந்தச் 'சுவிசேஷத்தொண்டுக்காகத் தங்கள் காட்டிலுள்ள கிறிஸ்துவமத அபிவிருத்திச் சங்கத்தாரால் விசேஷ மான ஊதியத்தைப் பெற்ருர்கள்.

இவ்வாறு ரrகருடைய பரிசுத்த ஜீவியத் தைப் பிரசங்கம் செய்துவங்தவர்களுள் ஆலன் என் னும் பாதிரி ஒருவர். அவர் தென்னிந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று பல தாழ்த்தப்பட்ட ஜாதி யினரைக் கரையேற்றி வந்தார். அவருடைய திவ்ய திருஷ்டி ஒரு சிறிய கிராமத்தின்மீது விழுந்தது. அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் யாவரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். பக்கத்திலுள்ள காடு களுக்கு ஆடு மாடுகளே ஒட்டிச் சென்றும், அங்கு விறகு வெட்டியும் ஜீவனம் செய்பவர்கள்.

அந்தக் கிராமத்திற்கு ஆலன் பாதிரி விஜயம் செய்தார். அப்போது அங்கே மாரியம்மன் திருவிழா நடந்துகொண்டிருந்தது. ஜனங்கள் மிகவும் பய பக்தியோடு அம்மனே வழிபட்டனர். சிலர் அலகு குத்திக்கொண்டு தம்முடைய பிரார்த்தனேயை நிறை வேற்றினர். -

ஆலன் பாதிரியார் அங்கே சென்று பார்த்த போது அவருக்கு அந்த ஊர் ஜனங்களிடத்தில் அபாரமான கருணை பிறந்துவிட்டது. "ஓ அஞ்ஞானி களே! தேவனுடைய பரிசுத்த வழியிலே போவதை மறந்துவிட்டு இந்தமாதிரி அஞ்ஞான வழி யி லே செல்லுகிறீர்களே. நம்முடைய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களின் பாவத்தைப் போக்கு