பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 9.

இவன் இருக்கிறது முந்தியே தெரியாமற் போச்சே!” என்று அவன் புலம்பினன். அவனுடைய வாத்ஸல் யம் தடையில்லாமல் வழிந்தோடியது. ஸ்ந்தோஷமும் அன்பும் கலந்து தோன்றின. ஆனல் அவற்றின் விளைவாக ஒரு பெரிய விபத்து நேரப் போகிற தென் பதை அவன் உணரவில்லை.

கிருஷ்ணன் பேய்பிடித்தவன் போலானன். கையிலே வைத்திருந்த குடையே அவனுக்கு ஆயுத மாயிற்று, அட படுபாவி சண்டாளா! சக்கிலிய காயே! என் குடித்தனத்துக்கு உலே வைக்கவந்த பாதகா என் வீட்டிலே நல்ல சாதிபோல வந்து வளர்ந்து எங்களே ஏமாற்றிய துரோகி..." அவ அனுடைய பொருமை, சாதியிறுமாப்பு, அவமானம் முதலிய பல உணர்ச்சிகளும் சேர்ந்துகொண்டன. வாயிலிருந்து வந்த வசைவெள்ளத்துக்குக் கரை போடுவார் இல்லே. முருகனே அடித்தடித்துக் குடை பிய்ந்துவிட்டது. முருகன் மேனிமுழுதும் ரத்தமயம். ஒரே கூட்டம் கூடிவிட்டது. -

'ஐயோ, பாவம் எத்தனே நல்ல பிள்ளே! இவனைச் சக்கிலியன் என்று சொல்வது பொய். இதைத் திர விசாரிக்கவேண்டும்' என்று சிலர் சொன்னர்கள்.

காலம் கலிகாலம். இந்தப் பாவம் ஏமுேழு ஜன்மத்துக்குங் தீராது. எவ்வளவு துணிச்சலப்பா இந்தப் பயலுக்கு சக்கிலியப் பயல்! சாதியை மறைத்து மேல்சாதியாரோடே உண்டு உடுத்து வாழ்வதென்முல்? இதைவிடக் கொலே செய்து விடலாமே!” - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/17&oldid=686179" இலிருந்து மீள்விக்கப்பட்டது