பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - கலைஞன் தியாகம்

முகத்தில் விழிப்பதற்கு அவர் மனம் சம்மதிக்கவில்லை. ஒன்றும் தோன்ருமல் இரண்டு மாதம் லீவுக்கு எழுதினர். லிவு வங்தது. - -

பெண்டாட்டி பிள்ளைகளைத் தம் மைத்துனன் வீட்டில் விட்டுச் சேலத்திற்கு ஓடினர். ஜில்லிர் போர்டு பிரளிடெண்ட் துரையைக் கண்டு அழுதார். குமாஸ்தாக்களுக்குச் சுகந்த புஷ்பங்களும் சுவர்ண புஷ்பங்களும் சமர்ப்பித்தார். கடைசியில் ஒருவாறு காரியத்தைச் சாதித்துக்கொண்டு வங்து சேர்ந்தார். லீவு முடிந்தவுடன் எடப்பாடி உயர்தர எலிமெண்டரி பாடசாலையில் முதல் உதவி உபாத்தியாயராக வேலை பார்க்கும்படி அவருக்கு உத்தரவு வந்தது. அன்று தான்் அவருக்குப் பழைய உயிரும் வங்தது. * .

மோகனூருக்குப் போய் நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டார். காந்தமலே ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்தார். காவேரிக்கு ஒரு கமஸ்காரம் செய்தார். கால்மண்ணே அங்கேயே உதறி விட்டு எடப்பாடிக்குப் புறப்பட்டு விட்டார். -

  • * *

எடப்பாடிக்குச் சுப்பராயர் வந்து இரண்டு மாதங்கள் ஆயின. அங்கே தலைமை உபாத்தியாயராக இருந்தவர் வயசானவர். அடுத்த வருஷம் உத்தி யோகத்திலிருந்து விலகப்போகிறவர். தூண்டித் துருவிப் பார்த்தால் சுப்பராயருக்கு ஒருவிதத்தில் உறவாகக்கூட இருந்தார். நாராயனேயர் என்பது அவர் திருநாமம். இரண்டு பேரும் கர்நாடகப் பேர் வழிகளாதலால் மனமொத்துப் பழகினர்கள். காவேரி