பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பலி 167

பொல்லாதது. அதற்குப் பயந்து பெரிய மகான்கள் கூட வணங்கிப் போயிருக்கிருர்கள். எதற்கும் கர்ம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.”

அவர் பேச்சு மூடுமந்திரமாகவே இருந்தது. விசாகைக்குப் பின்னும் கலக்கம் அதிகரித்தது; அவள் கண்களில் நீர் துளித்தது.

'அப்பா, நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி அதற்கேற்ற தண் டனே விதியுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒன் றுமே விளங்காமல் நீங்கள் என்னவோ சொல்கிறீர் கள். எனக்கு மிக்க வருத்தம் உண்டாகிறது.”

'ஒன்றும் இல்லையம்மா! நீ வயதுவந்த பெண். நீ பிறர் வீட்டுக்குத் தாராளமாகப் போய்ப் பழகுவது நல்லதன்று என்று யாரோ சொன்னர்களாம். அப் படி ஒரு சொல் உண்டாகும்படி நாம் வைத்துக் கொள்ளக்கூடாதென்று எண்ணினேன்.”

அறிவுடைய பெண் அவள். அவளுக்கு விஷயம் விளங்கிவிட்டது. சக்திகளிலும் திண்ணைகளிலும் வம்பளக்கும் வீண் மனிதர்கள் தன்னேப்பற்றியும் தருமதத்தனைப்பற்றியும் ஏதேனும் தவருகச் சொல்லி யிருக்கக்கூடுமென்றும், அதைக் கேட்டே தன் தகப் பனர் இவ்வாறு கலங்குகிருரென்றும் அவள் ஊகித் துக்கொண்டாள். -

விஷயமும் அதுதான்். "என்ன இருந்தாலும், தாவி கழுத்தில் ஏறின் பிறகல்லவா அவர்கள் புருஷ னும் மனேவியும் ஆவார்கள்? அதற்குள்ளே இப்படிப் பழகுவதென்றால் அடுக்குமா?’ என்று சிலர் சொன் ர்ைகள்.