பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கலைஞன் தியாகம்

தான்். அந்த ஊரை மிதித்தவுடன் அவனுக்குப் பழைய எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்ருக உண்டா யின. மதுரையில் தன் தாய் தங்தையருடன் வாழ்ந்து வங்த அவன் இப்பொழுது தனியனைன். அவர்கள் அவன் மதுரையில் இருந்தபோதே காலஞ் சென்றனர். தன் பழைய வீட்டிற்குத் தனியாக, மதுரையிலே சம்பாதித்த செல்வக் குவியலுடன் புகுந்தான்்.

அன்று காவிரிப்பூம்பட்டின முழுவதும் திரு விழாப் பட்ட பாடு பட்டது. தருமதத்தனே ஊரில் ஒரு குஞ்சுகூடப் பாக்கியில்லாமல் வந்து பார்த்தார் கள். யாவரும் நாற்பது வருஷத்துக்குமுன் நிகழ்ந்த கதையை, வீர சபதங்களே கினேங்து வியந்தார்கள். சிலர் கண்ணிர் வடித்தார்கள்.

தருமதத்தன் வங்தது விசாகைக்குத் தெரிந்தது. அவள் மனம் அவனேக் காணவேண்டுமென்று துடித்தது. இனி உலகம் பழிக்க இடமில்லை. காம் தனிமை தீர்ந்து ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று அவள் எண்ணிள்ை.

தருமதத்தன் வீட்டு வாயிலில் பெருங் கூட்டம். மலர் மாலைகளும் வாசனைச் சுண்ணங்களும் குவிந்து கிடந்தன. விசாகை தருமதத்தனேப் பார்க்க வருகிரு ளென்ற செய்தி தெரிந்ததும் ஊரே கூடிவிட்டது. இரண்டு தெய்வங்கள் உலகத்தில் ஒன்று சேர்ந்தால் எத்தனே ஆரவாரம் இருக்கும், அத்தனை ஆரவாரம்! மகளிர் புறஞ்சூழக் கன்னித் தெய்வம், வீர விசாகை, தருமதத்தனது வீட்டுள் புகுந்தாள். தரும தத்தன் ஆவலோடு அவளே எதிர்பார்த்து கின்ருன்.