பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்க்காரன் 181

குழங்தையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைக் தான்். அந்தத் தட்டை எடுத்துக்கொண்டு புறப் பட்டுவிட்டான். -

குழந்தை அங்கேயே சுருண்டு விழுந்து வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. வாயில் பாதியும் கையில் பாதி யும் இருந்த மிட்டாய் அவன் அறைந்த அறையில் கீழே விழுந்துவிட்டது. உயிர் துடிக்க அது கத்திக் கொண்டிருந்தது.

அதன் தாய் ஓடி வந்தாள்; குழந்தையை வாரி எடுத்தாள். "ஐயோ! படுபாவி, கொளந்தையைக் கொன்னுட்டானே!” என்று புலம்பினுள்; என் கண்ணே, சாமிக்குக் கண் இல்லையா? உன்னே என் பாழும் வயித்திலே ஏன் பொறப்பிச்சார்? எங்கே யாவது தோட்டி வீட்டிலே பொறந்திருந்தாலும் செளக்கியமாக இருக்கலாமே. இந்த மனிச மிருகத்தி ளிைடம் வந்து சிக்கிக்கொண்டாயே. எல்லாம் கான் பண்ணின பாவம்! ஐயோ! முதலியார் வூட்டுக்குக் கொண்டுபோனபோது ராசாவாட்டம் இருக்குது கொளங்தை; சாக்கிரதையாப் பாத்துக்கோன்னு நேத்துத்தான்ே அந்த அம்மா சொன்னாள்? என் ராசா, உன்னே அடிக்க எப்படித்தான்் அந்தப் பாவிக்கு மனசு வந்ததோ!" என்று அழுது கைந்து உருகிள்ை. அவள் உள்ளம் படபடத்தது; தேகம் பதறியது. அவள் ஏழையாயிருந்தால் என்ன? ஒரு தாயின் ஹிருதயத்தில் ஏழையென்றும் பணக்கார னென்றும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?

முனிசாமி வெகு வேகமாகப் போய்க்கொண் டிருக்கிருன்; இன்று காலேயில் அபசகுனம் மாதிரி