பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கலைஞன் தியாகம்

கேள்விமேல் கேள்வி வரவே அவள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பீறிக்கொண்டு கிளம்பியது. 'சீ, நீயும் ஒரு மனிசனட்டம் பேச வந்துட்டயே; கொளங்தையை ஒரே அடியாகக் கொன்னு போட்டு டறதுதான்ே? இப்ப விசாரிக்க வந்துட்டயே! சாமி உனக்குக் கூலிகொடுக்காமல் போவாது. அவளுக்குப் பேச்சு வரவில்லை; துக்கம் தொண்டையை அடைத் தது. கோவென்று அழத் தொடங்கிள்ை.

அவனுக்கும் அழுகை வந்துவிட்டது; அடக்கிக் கொண்டான்; 'இந்தா, இந்தப் பாரு; நான் சொல்றதைக் கேளு; என்ன? ஒன்னெத்தான்். இனிமே சாமி சத்தியமா அந்தக் கொளங்தையை கான் தொடறதே இல்லை. நான் படுபாவி. சாமி எனக்குக் கூலி குடுத்துட்டார். இங்தா, அளாதே, எனக்குக்கூட அளுகை வறது. என்னே அந்தச் செருப்பாலே அடி. பட்டுக்கறேன். இனிமே இந்தப் புத்தி வேண்டாமின்னு சொல்லி அடி' என்று அவனும் விம்மலான்ை. இந்த ஆரவாரத்தினிடையே குழந்தை கண்ணேத் திறந்து பார்த்தது.

அவன் எழுங்தான்். மிட்டாய் வைத்திருக்கும் கூடையைத் திறந்தான்். கைநிறைய எடுத்துக் கொண்டுவந்து அந்தக் குழந்தையின் கையில் கொடுத் தான்்; 'என் கண்ணு, இனிமே, தினம் உனக்குத் தான்் முதல் மிட்டாய்” என்று சொல்லி அதன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். எந்தக் கன்னத் தில் அவன் கையினுல் காலையில் அறைந்தான்ே, அதே கன்னத்தில் அவன் இதழ் முத்தமிட்டது. அடுத்தபடி அவளும் முத்தமிட்டாள். அந்த இரண்டு