பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 189

அறுபது நாழிகையும் ஆபீஸ் வேலேதான்். வீட்டிலே அவர்களைப் பார்ப்பதென்பது இயலாத காரியம், ராமசேவுையர் குழங்தை சீனு, சேவுையர் குழங்தை ராமு. அந்த இரு குடும்பத்தினரும் இயல்பாகவே அன்யோன்யமாகப் பழகி வந்தாலும் அந்தக் குழந்தை களிடையே ஏற்பட்ட அன்பினல் பழக்கம் பின்னும் உறுதிப்பட்டது. -

குழங்தை சீனுவுக்கு எந்தப் பகடிணம் தின்ருலும் ராமுவுக்குக் கொடுக்காமல் தின்ன மனம் வராது. மூன்றரை வயதுக் குழங்தையானலும் அவனுடைய புத்திசாலித்தனமும் அன்பும் எங்தக் குழங்தையி னிடத்திலும் காணமுடியாது. அப்பா வாங்கிக் கொண்டுவந்த பொம்மையை ராமுவுக்குக் கொடுத்து விடுவான். எங்த வஸ்துவும் ராமுவுக்குக் காட்டாமல் கொடுக்காமல் வைத்துக்கொள்ள அவன் மனம் சம்மதிப்பதில்லை.

ராமுவுக்கு இரண்டே வயது. அவனுக்கு ஜூரம் வரட்டும்; சீனு சாப்பிடவேமாட்டான். அவனுக்குப் போடும் பற்றைத் தான்ும் போட்டுக்கொள்ள வேண்டும். அவனுக்குக் கஞ்சிகொடுத்தால் இவனுக் கும் கொடுக்கவேண்டும். என்ன சொன்னலும் கேளாமல் தங்கள் வீட்டுப் பகடினத்தை ஒருவருக்கும் தெரியாமல் அவன் வாயில் ஊட்டிவிட்டு வந்துவிடு வான். அதனால் கன்மையோ, தீமையோ, அவனுக்கு அக்கறையில்லை. - - ராமுவுக்கு நிமோனியா ஜூரம் வந்தது. சீனு வுக்கு வரவில்லை; அவ்வளவுதான்்; ஆனால் அவனும் - ஆகாரம் உண்ணவில்லை. ராமுவுக்கு உடம்பு சரி