பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 197

பாதுகாக்கிறேன். எங்கேயோ துக்குறிபோல வங்து என்ன் என்னவோ உளறுகிறீரே போதும் உம் முடைய ஸஹவாளம். இன்றைக்கே இந்த வீட்டைக் காலி பண்ணும். உம்முடைய பிள்ளைக்கு அங்த அல்பாயுஸுப் பேரை வையுமே, பார்க்கலாம்” என்று அவர் இடிபோல இடித்து முழங்கினர். ராம சேவுையர் நடுங்கிப் போய்விட்டார். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையைப்போல இருந்தது.

வேறு வழியில்லாமல் மற்றெரு விட்டிற்கு வந்தார் ராமசேவுையர். ஒருவருடைய உணர்ச்சிகளே உள்ளபடியே மற்றொருவர் உணர்ந்துகொள்ள முடிவ தில்லை. கிட்டுவின் தகப்பனருக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்ததென்பது ராமசேவுையருக்கு விளங்கவே இல்லை. : - சீனு இளைத்துக்கொண்டுதான்் வங் தான்். போதாக்குறைக்கு அவனுக்கு மஞ்சட் காமாலை வேறு வந்துவிட்டது. -

ராமுவின் தகப்பனராகிய சேஷையர், ராம சேவுையர் தம் வீட்டை விட்டுப் போனபோது அள வற்ற துக்கத்தை அடைந்தார். அவர் சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தார். ராமசேஷையர் மயிலாப் பூரிலே குடியிருந்தார். ஆபீஸ் தொல்லைக்கு நடுவே அவ்வளவு தூரம் போய் அடிக்கடி பார்ப்பதென்பது முடிகிற காரியமா? ஏதோ சிலமுறை வந்தார். அப்பால் வருவதை நிறுத்திவிட்டார்.