பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 15

முருகன் மரியாதைக்குப் பயந்தவன். ஏதோ சிறுபிள்ளைத்தனத்தால் தன் சாதியை மறைத்து அவர்கள் வீட்டிலே சேர்ந்துகொண்டான். அதைத் தவிர அவனிடத்தில் வேறு குற்றம் ஒன்றும் இல்லை. தான்் பட்ட அடிகளெல்லாம் தான்் செய்த குற்றத் திற்கு வேண்டிய தண்டனையே என்பதே அவனுடைய தீர்மானம். ஆனலும் அந்தக் கிழவனே - "அப்பனே' - அவன் எப்படிப் பிரிந்திருப்பான்? இதுதான்் பெரிய விஷயம். கிழவனுக்கு எப்படி முருகனேப் பிரிந்திருக்க முடியவில்லையோ அப்படியே முருகனுக்கும் தன் அப்பனே’ப் பிரிந்திருக்க முடிய வில்லை. தெய்வமும் குருவும் தங்தையும் தாயும் எல்லாம் அந்தக் கிழவனே என்று அவன் நம்பி யிருந்தான்். இப்பொழுதோ கிழவன் உயர் ங் த சாதியான்; தான்் தீண்டாச்சாதி. இனிமேல் எப்படி அப்பனேப் பிரிந்து வாழ்வது!

பொழுது போகவேண்டுமே. அதற்காகத் தன் சொந்தத் தகப்பனேக்கொண்டு வர்ணம் வாங்கிவரச் சொல்லிச் சில பொம்மைகளைச் செய்தான்். அவை களேச் செய்தபோதெல்லாம் தன் கலைத்திறமை யையும் அந்தப் பொம்மைகளின் அழகையும் பார்த்து வியந்து பாராட்டி அன்போடு தடவிக்கொடுக்கும் கிழவனே கினேந்து உருகுவான்; ஐயோ! அந்த வாழ்க்கை சொப்பனம்போல் அல்லவோ போய் விட்டது! தெய்வமே' என்று தனியே இருந்து கெக்குருகிக் கரைந்து புலம்புவான்.

அவனுடைய சொந்த அப்பன் அவனுக்குச் செருப்புத் தைக்கக் கற்றுக் கொடுத்தான்். அதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/23&oldid=686185" இலிருந்து மீள்விக்கப்பட்டது