பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 23

குழந்தையைக் கொன்றுவிடுவானே என்ற பயம் திடீரென்று வந்ததாம்; அவள் விரிட்டுக்கத்தினளாம். அவள் கிலேயிலே இருந்தான்் முருகன். -

'ஏதாவது தந்திரம் செய்யத்தான்் வேண்டும். இதை எங்கேயாவது மறைத்து வைத்துவிடுகிறேன். பேருக்கு வேறு இரண்டு பொம்மைகள் செய்து வைக்கிறேன், அவன் வந்தால் கொடுக்க” என்று ச்ேசயித்து அந்த அழகிய உருவத்தைக் காகிதத்தில் கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டான்.

ஞாயிற்றுக்கிழமை; வழக்கம்போல் கிருஷ்ணன் சக்கிலிய ஆள் ஒருவைேடு வந்து நின்றன். "ஐயோ!' என்று முருகன் தேகம் பதறியது. ஆள் உள்ளே சென்று இரண்டு பொம்மைகளை வெளியே எடுத்து வைத்தான்். . . . .. . . . . . டே, இவ்வளவுதான்? இவை அவசரத்திலே செய்தவைபோல அல்லவோ இருக்கின்றன!” -

"ஆமாம்; செருப்புத் தைக்கிற Gమిడి) அதிகமாகப் போய்விட்டது.”

"இந்த வேலையை விட்டுவிடுவதுதான்ே?” யோசித்துப் - பார்க்கிறேன்." - - முருகன் முழுஞாபகத்தோடு பதில் சொல்லவில்லை. அவன் ஹிருதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது. பேந்தப் பேந்த விழித்துக் கொண்டும் கடுங்கிக்கொண்டும் பேசினன்.

என்னடா, திருடன் மாதிரி விழிக்கிருய்? திருட்டுப்பயல், உள்ளே வேறு பொம்மைகள் வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/31&oldid=686193" இலிருந்து மீள்விக்கப்பட்டது