பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 27 கிருஷ்ணன், 'தம்பி, நான் பாதகன்; உன்னைப் பாதக னென்றது. பெரிய பிழை” என்ருன்.

'என்ன அண்ணே! சொல்வது விளங்கவில்லையே! ஏன் இதைத் திரும்பக் கொண்டுவந்தீர்கள்?

'இந்தா அப்பா! உன் அப்பனை நீயே எடுத்துக் கொள். உன் அப்பனுக்கு தோன் பிள்ளை. கான் பிள்ளையல்ல. உன் அப்பன் உயிருடன் இருக்கையில் உன்னேப் படாத பாடு படுத்தினேன். உன் அப்பனிட மிருந்து உன்னே வேண்டுமென்றே பிரித்துவைத் தேன். அப்பன் சாகும்போதுகூட உன்னைத்தான்் நினைத்தான்். செத்த பிறகாவது அவன் உன்ைேடு இருப்பதை நான் ஏன் பிரிக்கவேண்டும்? உன் பழைய பொம்மைகளையெல்லாம், அருமை அறியாத பாவி கான் உடைத்துவிட்டேன். இந்தா, இதை எடுத்துக் கொள். உன் அப்பனே நீ இருதயத்தில் வைத்துப் பூஜித்து வருவது எனக்கு இப்போது கன்ருகத் தெரிகிறது. அந்த அப்பனுடைய விக்கிரகத்தை இப்படி அமைத்த உன் கையை கான் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இந்தா, எடுத்துக்கொள். என்னே மன்னித்து விடு. சாதியாவது குலமாவது! அன்புக்கு மிஞ்சித் தெய்வங்கூட இல்லே. இதெல்லாம் இந்தப் பாவிக்கு இப்போதுதான்் தெரிகிறது.”

"அண்ணே, இப்படி ஏன் பேசுகிறீர்கள்? என் அப்பன் என்கிறீர்களே, உங்களுக்கு அப்பனல்லவா?” முதலில் உனக்குத்தான்் அப்பன். அப்புறம் அவனுடைய ஆத்மாவுக்கு ஸம்மதமானல் எனக்கு

அப்பன். இந்தா வாங்கிக்கொள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/35&oldid=686197" இலிருந்து மீள்விக்கப்பட்டது