பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரின் குறை 33 கரும்பும் கனியும் அவள் ஆராய்ச்சிக்கு உட்பட் டன. பல வகை மதுரமுள்ள கனிகளை அவள் சுவைத் துப் பார்த்தாள். என்ன தேவலோகம் வேண்டியிருக் கிறது. ஒரு மரம். அதில் ஐந்து ஜாதி. அவைகளில் பொன்னும் மணியும் பழுத்துத் தொங்குகின்றன. அவை யாருக்கு வேண்டும்? தின்று ருசிப்பதற்கு மண் மகளின் பிரஸாதங்தான்் ஏற்றது. எத்தனே வகை1 எத்தனே ருசி!” என்று அவள் பிரமித்தாள். 'சரி, பழங்களே சுவையுள்ள பொருள்கள்” என்ற தீர் மானத்துக்கு வந்தாள்.

'இந்த இரண்டு நாட்களாக இங்கே வந்த அணங்குகளின் மனத்தைக் கவர்ந்த புஷ்பத்தைப் பார்த்துப் போகலாமே” என்ற ஓர் எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று. பூங்கானகத்திற் சென்று மலரருகில் கின்ருள். அதன் அழகும் மென்மையும் காமதேவன் திருவுள்ளத்திற்கு உவப்பைத் தருவனவே என்பதை அவள் உணர்ந்தாள். அது என்ன? இதற்குள் ஏதோ துளி இருக்கிறதே! என்று தொட் டுப் பார்த்தாள். அதுதான்் தேன். அதனைச் சுவைத்துப் பார்த்தாள். அடடா! என்ன பேதைமைl ஏமாங் தல்லவா போய்விட்டோம்! இந்தத் திருட்டுப் புஷ்பங்கள் இந்த வஸ்துவைக்கூட வைத்திருக்கின் றனவே! ஆஹா என்ன ருசி! என்ன அருமை! சக்கையும் வித்தும் கலந்து நிரம்பிய பழங்கள் இதற்கு எவ்வளவோ தூரத்திலல்லவோ நிற்க வேண்டும்? இது தான்் சுவை! இதுதான்் சுவையின் உச்சி!”

மலருக்கு வந்த அதிருஷ்டம்: அமுதவல்லியின் சுவைப் பரீrையிலும் அதுவே முன்னல் கின்றது.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/41&oldid=686203" இலிருந்து மீள்விக்கப்பட்டது