பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் பரீகூைடி 59

ஆனாலும் நெகிழவில்லை; மூச்சுள்ளவரையில் நெகி ழாது. வைரத்துக்கு நெகிழ்ச்சி ஏது?

5

அன்றுதான்் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய முறை தொடங்கப்படுகிறது. அதுவரை உண்டுவந்த அரிசிச் சோற்றை விட்டுக் கம்பங் களியைத் தின்னத் தொடங்கினர். அவர்கள் இருந்த கிலேயென்ன! வந்த நிலையென்ன! இந்த வறுமையில் கல்யாணம் எங்கே! காதலன் எங்கே! ஸர்வம் மித்யை-எல்லாம் சொப்பனம்.

அங்த வீடு ஒரு சங்தில் உள்ள கூரை வீடு. வாசலில் என்றும் இல்லாதபடி மோட்டார் ஊதுகுழற் சப்தம் கேட்டது. உயர்ந்த உடை அணிந்துகொண்ட கோலத்துடன் உள்ளே ஒருவர் வந்தார். 'மாமா' என்ற தழுதழுத்த குரலோடு அவர் உள்ளே துழைந்தார். முதலியார் மெல்ல எழுந்து கிமிர்ந்து பார்த்தார். அவருக்குத் தாம் பார்ப்பது உண்மையோ பொய்யோ என்ற ஸங்தேகம் வந்துவிட்டது; அவர் தம் எதிரே பொன்னம்பலத்தையல்லவா காண்கிருர்! பொன்னம்பலமா? எங்கேயப்பா வந்தாய்: இந்தத் துர்ப்பாக்கிய நரகவாசிகளிடத்துக்கு நீ வரலாமோ?' என்று ஹீனஸ்வரத்தில் முதலியார் சொல்லும்பொழுதே துக்கம் மேலே பேசமுடியாத படி அவர் தொண்டையை அடைத்துக்கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/67&oldid=686229" இலிருந்து மீள்விக்கப்பட்டது