பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் பரீகூைடி 61

பார்த்தும் கண்ணேப் பிடுங்கிக்கொள்ளாத பாதகன் பொன்னம்பலம். வள்ளி என்னேப் பார்.”

வள்ளியின் கண்கள் திறந்தன. அழுத கண்

ஆணுடன் கின்ற பொன்னம்பலம் கீழே தொப்பென்று

உட்கார்ந்தான்். வள்ளி அவன் மடியில் விழுங்தாள். அந்த அறைமுழுதும் கண்ணிர் மயமாயிற்று.

米 ,来 来源

பொன்னம்பலம் வேறு பரீrையொன்றில் தேர்ச்சி பெற்று மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஆங்திரதேசத்தில் உள்ள ஒர் ஊருக்குப் போனன். அந்தக் காலத்தில் முதலியார் மிடுக்குடன் இருந்தார். பொன்னம்பலம் போனதுமுதல் தன் தகப்பருைக்கு அவர்களைப்பற்றி விசாரித்து எழுதுவான். அவரோ ஒன்றும் எழுதுவதில்லை. ஊருக்குப் போகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டான் அவன். ஒரு வருஷங்கழித்து விடுமுறைக்கு வந்தான்். திருவேங்கட முதலியாரின் கேவலநிலை தெரிந்தது. தன்னுடைய வள்ளியைப் பெற்றுக்கொள்வதற்கு ஒடி வந்தான்்; கண்டான்; வருங்தினன்.

米 * 来 அந்த ஆனிமாதம் பொன்னம்பலத்திற்கும் வள்ளியம்மைக்கும் மிகச் சிறப்பாகக் கல்யாணம் நடைபெற்றது. எல்லாச் செலவும் பொன்னம்பலமே போட்டுக் கொண்டான்; கல்யாணம் ஆன ஒரு மாதத்தில் வள்ளியையும் அவளுடைய பெற்றேர் களையும் அழைத்துக்கொண்டு ஆந்திரதேசம் போய் விட்டான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/69&oldid=686231" இலிருந்து மீள்விக்கப்பட்டது