பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கலைஞன் தியாகம்

பார்த்தார். அவருக்கு எவ்வளவோ வேலை' என்று வாத்தியார் சொல்லிவிட்டார்.

சித்திரை மாதம் முடிவடைந்தது. வைகாசி மாதம் ஆரம்பமாயிற்று. நீங்வாஸையர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கே வரலார்ை. ஜாதகம் கொடுக்கும் படி கேட்பார். கான் ஏதாவது சாக்குச் சொல்லி விடுவேன். கடைசியாய் அவருக்கு மனம் புளித்து விட்டது. - x

ஆனி மாதம் இரண்டாம் வாரம்; ஒரு நாள் பாட்டு வாத்தியார் சிறிது வருத்தத்தோடு வந்து நின்றார்.

என்ன சமாசாரம்?” என்று நான் கேட்டேன். பாட்டுப் போதும்; நீங்கள் காளேமுதல் நின்று கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் உங்கள் நண்பர்' என்றார்.

நான் சிறிது யோசித்தேன். சரி; நான் ஒரு ஜாதகம் தருகிறேன். அதை காளேக்கு அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி என் பிள்ளேயின் ஜாதகத்தைக் கொடுத் தேன். .

மறுநாள் நான் எதிர்பார்த்தபடியே வாத்தியார் மிகவும் குதுர்கலத்தோடு வந்தார்; "நீங்கள் ஏதோ மந்திரம் பண்ணியிருக்கிறீர்கள்! நான் கொடுத்த ஜாதகத்தை அவர் பார்த்தார். கண்ணில் ஒற்றிக் கொண்டார். அப்புறம் திடீரென்று என்னேப் பார்த்து, ராத்திரியெல்லாம் யோசித்துப் பார்த்தேன். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எவ்வளவுக் கெவ்வளவு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிருேமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/86&oldid=686248" இலிருந்து மீள்விக்கப்பட்டது