பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைஞன் தியாகம்

முகூர்த்தம் வைப்பதற்காக வந்திருக்கிருர்கள். நீங்கள் வந்து விவாகத்தை கடத்திக் கொடுக்கவேண்டும்" என்று ரீநிவாஸையரைப் பார்த்துக் கூறினேன். மேலே பேச்சை வளர்த்தாமல் இருக்க வேறு வழி இல்லே.

'இவர்கள் ஸர்வே ஆபீஸில் பெரிய வேலையில் இருக்கிருர்கள். உத்தமமான குணம். ஸங்கீதத்தில் மகாரளிகர்கள்' என்று ஸ்ம்பந்தியாகப் போகிற வருக்கு நண்பரைப் பழக்கம் செய்துவைத்தேன்.

பூரீநிவாஸையர் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே! . . . . . . . . . . . . . "

மறுநாள் முதல் பாட்டு வர்த்தியார் கிறுத்தப் l-11–L–ITET. - -

  • # 슷

அன்று ஆடிமாதம் முதல் தேதி, தகதினயனம் ஆரம்பம். கிருஷ்ணகான ஸ்பைக்குப் போயிருங் தேன். நீங்வாஸையர் அங்கே உட்கார்ந்திருந்தார். "ஏன் எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வரவில்லை?” என்று கேட்கலாமென்று அவரை அணுகினேன். அவர் என்னேக் கண்டவுடன் பேசாமல் எழுந்து நெடுந்து ரத்தில் உள்ள ஓர் ஆசனத்திற் போய் உட்கார்ந்துகொண்டார். - . . . .

உத்தராயண ஆரம்பத்தில் ஏற்பட்ட எங்கள் நட்பு தகதிளுயன ஆரம்பத்தில் அறுந்துபோயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/88&oldid=686250" இலிருந்து மீள்விக்கப்பட்டது