பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன்

ாாமசாமி முதலியார் தம்முடைய உத்தியோக காலத்தில் சம்பாதித்த பணமெல்லாம் இப்பொழுது இருந்த இடம் தெரியவில்லை. அவர் தம்முடைய வாழ்க்கையில் மிகவும் அருமையாகப் போற்றிவந்த பங்களாவைக்கூட அவர் குமாரர் விற்றுவிடத் துணிந்துவிட்டார். தம்முடைய கிராமமாகிய செங் தாரப்பட்டிக்கே போய் இருக்கிற கிலங்களைப் பார்த் துக்கொண்டு காலங்கழிக்கலாம் என்று எண்ணி, கண்ணப்ப முதலியார் தம் தந்தையார் அருமையாகப் பாடுபட்டு அழகாகக் கட்டிய பங்களாவை விற்க ஏற்பாடு செய்தார். - . . . பங்கள வென்றால் அது சாமானியமானதா? ராம சாமி முதலியார் கடைக்தெடுத்த பேர்வழி. சுகமாக இருக்கவேண்டுமென்பது அவருடைய கொள்கை. கடன் வாங்கியாவது தம் கெளரவத்தைக் காப் பாற்றிக்கொள்ள வேண்டியதுதான்் புருஷலக்ஷண மென்பது அவர் கருத்து. மொஹிதீன் மரக்காயர் கம்பெனியில் அவர் மானேஜர் வேலை பார்த்தார். கட்டட வேலைக்காரர்களையும், எஞ்சினர்களையும், கண்ட்ராக்டர்களையும் அவர் நன்ருக அறிவார். பொறுக்கி எடுத்த உறுதியான சாமான்களால் அவர் தம்முடைய பங்களவைக் கட்டினர். அதன் அமைப்பு.

б

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/89&oldid=686251" இலிருந்து மீள்விக்கப்பட்டது