பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 . கலைஞன் தியாகம்

கொள்வான் பழுப்பிலையை எசமானுக்குப் பல்தேய்க் கக் கொடுப்பான். அன்பு முற்றில்ை அது பைத்திய மாகுமாம். குப்புசாமிக்கு அங்த மாமரத்தினிடம் பித்துத்தான்் பிடித்திருந்தது.

குப்புசாமிக்குக் கல்யாணம் கடந்து நாற்பது வருஷங்களுக்குமேல் ஆகின்றன. அவனுக்குக் கல் யாணம் கடந்த அன்று உலக ஸ்வபாவத்துக்கேற்ப ஒரு சங்தோஷம் இருக்குமல்லவா? அவனுக்கும் அங்தச் சங் தோஷத்துக்குக் குறைவில்லை. ஆனல் இன்றைக்கு அவனுக்கு உண்டான சந்தோஷம் என்றும் இருந்த தில்லை. வள்ளி பிறந்தபோது உண்டான மகிழ்ச்சி இந்தச் சந்தோஷத்தில் லக்ஷத்தில் ஒரு பங்குதான்் என்று சொல்லவேண்டும். அத்தனே உத்ஸாகம், பூரிப்பு, மெய்ம்மறந்த ஆனந்தம் கள்ளா குடித்து விட்டான்? இல்லே, இல்லை. எத்தனே களியாட்டம்! முகத்தில் அவனுடைய ஹிருதயத்திலுள்ள இன்ப சாகரம் பொங்கி வழிகிறது! புதையலேயா எடுத்து விட்டான்? ஒன்றும் இல்லை. அவன் வளர்த்த ஒட்டு மாஞ்செடி அன்று அரும்பியிருக்கிறது. அடாடா! என்ன உச்சஸ்தாயியில் அவன் கண்டம் இன்றைக் குப் பேசுகிறது! ஏதேது, அவனுக்கு இருந்த ஆனந்தம் அவனுடைய மூளையையே கலக்கிவிட்டாலும் விட

லாம். . - -

'இனிமேல் காய்க்கும்; பழுக்கும். பழுத்து விழுந்ததைத்தான்் எசமானுக்குக் கொடுப்பேன். அப்பொழுதுதான்் அதற்கு ருசி அதிகம் என்று அவன் மனுேராஜ்யம் பண்ணினன். அந்த மாம் பூவின் மணம் தென்றலில் வீச அச்செடியின் நிழலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/94&oldid=686256" இலிருந்து மீள்விக்கப்பட்டது