பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுமொழி கலைஞர் மடல் உவமை நிலவிற்குக் கணக்கில் அடங்கா நட்சத் திரங்கள் உள்ளன. ஆனால் சிற்சில நட்சத்திரங்கள் தான் நளினமாக நிலவிற்கு அருகில் இருக்கின்றன அல்லவா? அதுபோல்தான் நீங்கள் எனக்கு...’ உன்னத நயம்: ஒருமுறை ஒரு நண்பர், தன்னைக் கலைஞர் மறந்துவிட்டார் என்பதைச் சுட்டிக் காட்டி, 'வான மண்ட லத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு இருப்பது ஒரே நிலவு; ஆனால், நிலவிற்கோ, எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதுபோலத்தான் நானும் நீங்களும்'- என்று மடல் எழுதி இருந்தார். மறுமொழி கலைஞர் மடல்; 'நிலவிற்குக் கணக்கில் அடங்கா நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால், சிற்சில நட் சத்திரங்கள்தான் நளினமாக நிலவிற்கு அருகில் இருக்கின் றன அல்லவா? அதுபோல்தான் நீங்கள் எனக்கு...' என்று மடல் வரைந்தார் மறுமொழியாக! BONTFOL வழக்கமாக கடிதம் வரையும் நண்பர்கள் மடல் எழுத மறந்துவிட்டால், மறதி மலையாகிவிட்டது; நினைவு துரும்பாகிவிட்டது; தங்களுக்குத்தான்!' என்ற வாசகம் மட்டும் வரைந்த மடல் விரைந்து செல்லும் கலைஞரிட மிருந்து! இவ்விதம் 'நறுக் நறுக்'கென்று நண்பர்க்கு கடிதம் எழுவதில் வல்லவர்க்கு வல்லவர் கலைஞர்.