பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


வள்ளுவர் கோட்டம்

குறள் முழுவதையும் பிறழாமல் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்று, அதனாலேயே 'திருக்குறள் பெருமாள்' என்று அழைக்கப்பட்ட பெருமாள் அவர்கள் 30.10.1914இல் பிறந்துள்ளார். கலைஞர் அவர்களின் குறளோவியமும் அவர் கண்ட வள்ளுவர் கோட்டமும் அவரது புகழை என்றென்றும் நிலைபெறச் செய்யக் கூடியவையாகும்.

திரைப்பட இயக்குநராக விளங்கிய வி. சீனிவாசன் என்பவர் 30.11.1929இல் பிறந்துள்ளார். கலைஞர் அவர்கள் திரைப்படத் துறையில்-திரைக்கதை அமைப்பில்-வசனம் எழுதுவதில் புதுமைகள் விளைவித்திருக்கிறார்.

பல்வகைச் திறன்கள்

மிகச்சிறந்த சிந்தனையாளர் அவர். சொல்லாற்றல், எழுத்தாற்றல், வியக்கத்தக்க நினைவாற்றல், மதிநுட்பம் போன்றவற்றில் முழுப்பேராற்றல் வாய்ந்தவர் இந்நாளில் இவரைத் தவிர வேறு எங்கும் இல்லை.

இரவில் தூங்கப் போகும் வரை எழுதுகிறார். மிகச்சிறந்த இலக்கியவாதி. அரசியல்வாதியாக இருந்து கொண்டு இலக்கியவாதியாகவும் திகழ்கிறார்.

இங்கு புதுமையான வகையில் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளீர்கள். இது தடுக்கு அழைப்பிதழ் ஆகும். தடுக்கு போல அமைந்திருக்கிறது. இந்த அழைப்பிதழைப் பார்த்தால் கலைஞர் மிக மகிழ்ச்சி அடைவார்.

வள்ளுவர் கோட்டத்தை கலைஞர்தான் உருவாக்கினார். ஆனால் அதன் திறப்பு விழாவுக்கு முறையான அழைப்பில்லை அவருக்கு. மத்திய அரசாங்கத்தின் தொலைக்காட்சித்துறை என் வாழ்க்கை வரலாற்றைப் படமாகத் தயாரித்திருக்கிறது.