பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

口19

ஏற்றிய விளக்கு எண்ணெய் தீர்ந்ததும் அணைந்து விடும். உதய சூரியனுக்கு எண்ணெய் ஊற்றுவதால் ஒளியைத் தருவதில்லை. அது இயற்கையாகவே ஒளி தருகிறது. கலைஞர் அவர்களும் எண்ணெய் ஊற்றாமலே எரியும் எழுத்துச் சூரியனாக இயங்கிக் கொண்டிருக்கிறார். எச்சங்களின் உச்சம் எப்படிப் பார்த்தாலும் எவ்வளவு கழித்துப் பார்த்தாலும் மிச்சப்படுகிறார்.

'ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்'

என்று வள்ளுவர் கூறுகிறார். அத்தகைய உயர்ந்த புகழை நிலைத்த புகழை இவர் பெற்றிருக்கிறார். இவரது எழுத்தாற்றல், பேச்சாற்றல், அணுகுமுறைகள், அரசியல் செயல்பாடுகள் போன்றவற்றைச் சிந்தித்துப் பார்க்கையில் எச்சங்களின் மிச்சமாக சிலர் இருப்பர்.இவரோ எச்சங்களின் உச்சமாக இருக்கக் கூடியவர்.

இவர் என் நண்பர் என்பதிலும், நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் இவர் பிறந்தவர் என்பதிலும்,பாடல் பெறாத தலமாகிய பழையனூரில் நான் பிறந்தேன்.இவரோ,பாடல் பெற்ற தலமாகிய திருக்குவளையில் பிறந்தார் என்பதிலும், என்னைவிடப் பல படிகள் மேலோங்கி இருக்கிறார்.

இன்றைக்குத் தமிழகத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது.இவரை விட்டால் வேறு தலைவர் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.இந்தத் தடவை நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.வாய்ப்பை,விட்டுவிடக் கூடாது. இவரை வைத்துத் தான் தமிழ்நாட்டில் ஏதாவது செய்ய முடியும்.