பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞரைப் பற்றி... கலைஞர்

'படுத்திருக்கும் வினாக்குறிபோல் மீசையுண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்க்கு” என்று ஒருமுறை கூறி கவிதா மண்டலத்தின் பாராட்டுதலைப் பெற்ற,தோழர் சுரதா, பாரதிதாசனின் நேர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது மாணவருங்கூட! வளமான சொற்கள் சுரதாவின் கவிதை வரிகளில் பொங்கி வழிவதை நாம் காணமுடியும், பாரதியார் முதலிய தமிழ் ஏடுகளைப் பக்கத்திலே வைத்துக் கொண்டு பாட்டெழுதும் பழக்கமுடையவரல்ல.பல நாட்கள் காலத்திரையால் மறைக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் கவிதைகளை வாரந்தோறும் நீங்கள் சுவைக்க லாம். கவிதையழகைக் காணுங்கள். "விழி முடிக்கும் காதல் திருமணம்' என்று குறிப்பிடுகிறார் - ஆகா ! புரோகிதரின் ஜாதகம் முடிவு செய்யும் திருமணமல்ல; தரகர்கள் பேசி முடிக்கும் திருமணமுமல்ல: பெற்றோரும் குறுக்கிட்டு முடிப்பதல்ல. விழிகளே முடித்து விடுகிறதாம். இதுபோன்ற பொருள் ததும்பும் நீண்ட வாக்கியங்கள் ஒரே வார்த்தையில் சொல்லும் முறை சுரதாவுக்குத் தனிப்பண்பு.

(ஆ-ர்) மு. கருணாநிதி முரசொலி வார இதழ் 30-7-54

தொடர்பு முகவரி

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை - சேலம் மாவட்டம்

அமைப்பாளர் : கவிஞர் எழுஞாயிறு இணை அமைப்பாளர் : கவிஞர் அன்னையன்பன் பேரவை ஒவியர் : கவிஞர் காகா

முப்பாலிகைப் பதிப்பகம், 10, காளியப்பா குடியிருப்பு. பெரமனுார். சேலம்-636007 தமிழ்நாடு.