பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6凹

நாளில் பிறந்த பெருமக்கள் பட்டியலைப் படித்துக்காட்டுவது வழக்கம். இதன் வாயிலாகப் பல்வேறு துறைகளில் நாட்டுக்காக உழைத்த - நற்புகழ் பெற்ற நல்லோர் பலரை நினைவு கூர முடிகிறது. இந்த 88ஆம் ஆண்டில் 107வது நிகழ்ச்சியாக வேலூரில் கலந்து கொண்டு, 31.10.1988ஆம் நாளாகிய இன்று இதே நாளில் பிறந்த பெருமைக்குரிய பெருமக்கள் சிலரைச் சுட்டிக் காட்டுகிறேன்.

நாவலாசிரியர்

30.10.1821இல் இரஷ்ய நாவலாசிரியராகிய தஸ்தோவஸ்கி என்பவர் பிறந்திருக்கிறார். எனது நண்பர் கலைஞர் அவர்களும் சுருளிமலை,வெள்ளிக்கிழமை, புதையல்,ரோமாபுரிப் பாண்டியன்,தென்பாண்டிச் சிங்கம் பொன்னார் சங்கர் போன்ற பல்வேறு நாவல்களைப் படைத்து. நாடு போற்றும் நாவலாசிரியராக விளங்குகிறார்.

கவிஞர்:

அமெரிக்கக் கவிஞர் எஸ்ரா பவுண்டு பிறந்தது 30.10.1885இல்.

“தளை தட்டும் தொடை தட்டும் எனது பாட்டில்' என்று அடக்கத்தோடு சொன்னாலும்கூட, கவியரங்கத் தலைமை ஏற்கின்றபோது களைகட்டச் செய்யும் ஆற்றல் படைத்த கவிஞராக எனது நண்பர் கலைஞர் அவர்கள் விளங்குகிறார்.

(தலைவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தலைமையில் கவிஞர் சாஸ்திரி வெங்கட்ராமன், கவிஞர் மு.அருங்குளவன் ஆகியோரும்,30.11.88இல் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை,அவர்கள் இல்லத்தில் சந்தித்து உலகத் தமிழ்க் கவிஞர் பேரவைக்கு சிறப்புப் புரவலராக