பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பசுத்தோல் வேங்கை பாராய்!” அன்பு நண்ப, 'வீண் மிரட்டல்கள் என்னிடம் பலிக் காது என்னை; இதைச் செய்-அதைச் செய்- என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது. என்னை நீங்கள் கொன்றாலும் உங்களுக்கு எந்தப் பயனும் கிட்டாது." லட்சுமணபுரியில் மாணவர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பிரதமர் மொரார்ஜிதேசாய் அவர்கள் அளித்த அமைதியான கருத்தின் ஒரு பகுதி இது? மாணவர்களின் கோரிக்கை நியாயமானதோ அல் லவோ ; அவர்களின் போக்குச் சரியானதோ அல்லவோ; அவர்களை அணுகிப் பேசிப் பிரச்சினைகளை விவாதிப்பதில் காங்கிரசின் பெருந்தலைவர்கள் காட்டுகிற பொறுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு! கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீப்பிழம்பெனத்திக்கெட்டும் குமுறிக்கிளம்பிய மாணவமணிகளைத் தன் இனிய குரலால். அழைத்து-கனிவு மிகு நல்லுரைகளால் ஈர்த்து-அவர்களை அமைதிப் படுத்திய தமிழக முதல்வராம் நமது அண்ணன் காட்டிய பொறுமையையும் நினைத்துப்பார்!பொங்குமாங் கடல் போலச் சீறிச் சினந்தெழுந்திடும் மொரார்ஜிதேசாயி யையும் பார்! ய .