பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 89 காங்கிரஸ்காரர்களுக்கு மாணவர்கள் என்றாலே ஒரு கசப்பு! வெறுப்பு! ப்போது, தமிழ் நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம் மாணவர்களைத் தட்டிக் கொடுக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையின்ராக இருந்தாலும் அந்த மாணவர்களும் கட்டுப்பாட்டு உணர்வுடன் காங்கிரசை கண்ணைமூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். ஆனால் பாவம் அவர்களுக்குக் காங்கிரசின் "சுயரூபம்" தெரியவில்லை. ஏதோ; தங்கள் மீது திடீரென அன்பு தோன்றி விட்டதாக அவர்களுக்கு ஒரு மயக்கம்! ஆட்டுக் குட்டியின் மீது ஓநாயும்-ஆடித்துள்ளும் அழகான மான் மீது வேங்கையும் அன்பு கொண்டு அவைகளின் முதுகைத் தங்கள் நாக்கினால் தடவிக் கொடுக்கின்றன என்று அறிவுள்ள யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் என்பது மாநிலக் கட்சியல்ல. அகில இந் தியக் கட்சி! மொரார்ஜியோ காங்கிரஸ் தலைவர் மட்டு மல்ல; இந்தியாவின் துணைப் பிரதமர்! அவர், மாணவர் களிடம் நடந்து கொண்ட முறையும் உதிர்த்த வார்த்தை களும்; அவர் வீற்றிருக்கிற இடத்திற்குப் பெருமை தேடித் தரக்கூடியவைகள் அல்ல! பல்கலைக் கழகத்திற்கு வந்தவர்முன்னால் -மாணவர் கள் கருப்புக் கைக்குட்டைகளை ஆட்டி; கிளர்ச்சி செய் தனர். அது கண்டு மொரார்ஜி வெகுண்டெழுந்தார். வேலெனச் சொற்களை வீசினார். நண்பா; உனக்கு நினைவிருக்குமென நம்புகிறேன் - "மாணவர்-பஸ் தொழிலாளர் தகராறு" சென்னையில் நடந்த போது; தமிழக முதல்வர் அண்ணா அவர்கள், கிளர்ச்சி செய்தவர்களைச் சந்திக்க அவரே சென்றார். பேச்சு வார்த்தை நீடித்த போது தாகமெடுத்த அண்ணா வுக்குத் தண்ணீர் கொடுப்பதையும் தடுத்தனர் சிலர். அவர் பேசும்போது எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். ஆனால் நமது அண்ணன்; சாந்தகுண காந்திபோல-சார