பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 91 ஆமாம்! அவர்களுக்காகத்தான்! அந்த மாணவர்களுக்காகத்தான்! அவர்கள் என் ரத்தத்தின் ரத்தம்- சதையின் சதை!” என்று பாசம் பீறிட-பந்தமும் சொந்தமும் திகழ்ந்திட- பதிலிறுத்தாரே அண்ணா; அந்தத் தென்றல் உள்ளத் தையும் பார்! மொரார்ஜியின் புயல்வேக நெஞ்சத்தையும் பார்! மொரார்ஜி, லட்சுமணபுரியோடு நிற்கவில்லை- தமிழ கத்துக்கும் தாவியிருக்கிறார்; அங்கிருந்தவாறே! “இந்திதான் தேசிய மொழி! இந்தியை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு, தவறான பர்தையில் போய்க் கொண்டிருக்கிறது. இந்தக் கதை வெகுநாள் ஓடாது!” இதுவும், லட்சுமணபுரியில் மொரார்ஜி தேசாய் பேசியது தான்! தமிழகத்தில் இன்னும் காங்கிரசை நம்பியிருக்கிற சில மாணவர்கள் மொரார்ஜியின், இந்தக் கருத்துக்குத் தலை வணங்கப் போகிறார்களா? 6 அல்லது. "தமிழ் வளர்க்கப் போகிறோம்" என்று காங்கிரசை விட்டு வரப்போகிறார்களா?- வடக்கிலிருப்போர் நெஞ்சில் இன்னும் இந்தி வெறி இருக்கிறது! அதனை இந்தியா வெங்கும் பரப்பிடத் துடிக் கிறார்கள் என்பதும்; அதற்குத் தமிழக அரசு தடையாக நின்றால் ஆத்திரப்படுகிறார்கள் என்பதும் மொரார்ஜியின் பேச்சுக்கு விளக்கமாகும்.