பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 / கலைஞர் கடிதம் கைக்காக உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரின்பக்கமே திரும்பவில்லை, அன்றைக்குப் பாராண்ட பாவிகள்! இன்றைக்கு நமது மகிழ்ச்சியிலே பங்குகேட்க வந்தா லும் பரவாயில்லை; "உனக்கென்ன மகிழ்வதற்கு உரிமை யிருக்கிறது?' என்று உரத்த குரலில் கத்துகிறார்கள். என்று தமிழன்னையிடம் கேட்டுக் கொண்டு; று 'தமிழ்த் தாயே! அவர்களை மன்னித்து விடு! முத்து பிறக்கும் கடலில் நண்டு நத்தை களும் பிறப்பது போல்; தமிழ்ப் பகைவர் சிலர் பிறந்து விட்டார் உன் வயிற்றில்! என்ன இருந்தாலும் உன் பிள்ளைகள் தானே! ஆகவே அவர்களை மன்னித்துவிடு தாயே; மன்னித்துவிடு!' என் உயிரனைய நண்பா! உயர்குண மேவிய தமிழா! உலகெங்கும் பரவியிருக்கும் உத்தமனே! உன் விழி திறந்த தமிழுக்கு விழா எடுப்பாய்! தமிழ் நாடு வாழ்க! வாழ்க! என முரசறை வாய்! மங்கல முரசறை வாய்! கொடிகள், வான்முட்டப் பறக்கட்டும்! கொள்கை மணக்கும் "பதாகைகள் தெருவெல்லாம் திகழட்டும்! இனிமைத் தமிழ் நாடு வாழ்க என இசை முழக்கம் எங்கெங்கும் கேட்கட்டும்! ஊர்வலங்கள் கடல் அலையை வெல்லட்டும்!