பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 97 கூட்டங்கள், பட்டி தொட்டியெல்லாம் நடக்கட்டும்! விழா! விழா! விழா! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! தமிழ் நாடு! தமிழ் நாடு! தமிழ் நாடு! இந்தப் பெருமைமிகு திருநாளை உருவாக்கிடக் கார ணமாகத் திகழ்கின்ற; தெவிட்டாத செங்கரும்புப் பேச்சாளர்-தித்திக்கும் சீனிக்கற்கண்டு எழுத்தாளர்-எத்திக்கும் புகழுகின்ற நம் தலைவர் - பேரறிஞர் அண்ணாவின் புகழ் பாடி; நாடெங்கும் நல்லவிழா கொண்டாட- நண்பனே! உன் முயற்சிகளைத் தொடங்கிடுக! 4-F அன்புள்ள மறவன் 26.11.68