பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தமிழ் நாடு' ஒரு முழு விளக்கம்! அன்பு நண்ப, “புளுகினாலும் புளுகினான் மனுஷன் நீலம் கட்டுப்படப் புளுகினான்" என்று கிராமங்களிலே ஒரு வேடிக்கை மொழி பேசு வதுண்டு. சலவை செய்கின்ற தொழிலாள நண்பர்களுக்கு; சலவை உடையில் நீலம் சரியாகப் பாவாத நேரத்தில்; ஊரில் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிப் பரப்பி வைத்தால் உடனே சலவைக்கான உடையில் நீலம் பிடிக் கும் என்பது ஒரு தவறான நம்பிக்கை. சலவைத் தொழி லாளர்களை சாக்காக வைத்துக் கொண்டு சந்தர்ப்பவாதி கள் புளுகுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது உண்டு. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு "வடலூர் ராம லிங்கம் வரப்போகிறார். மீண்டும் நாட்டில் உலவப் போகிறார்" என்று துண்டு அறிக்கைகள் வெளியிடப்பட் டன. ஏராளமான மக்கள் அதனை நம்பி ஏமாந்தார்கள். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, திருப்பதிகோயிலைப் பற்றி ஒரு துண்டு அறிக்கை லட்சக்கணக்கில் நாடெங் கும் விநியோகிக்கப்பட்டது. அதில்; ஒருநாள் திருப்பதி கோயில் குருக்கள் சாமி சந்நதிக்குப் போன போது; ஒரு ஐந்துதலை நாகம் படமெடுத்து ஆடியது என்றும், குருக்கள் அந்த நாகத்தை வணங்கி நின்றார் என்றும்,