பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 / கலைஞர் கடிதம் பதை “தமிழ்நாடு" என்று மாற்றியது காங் கிரஸ் ஆட்சி." இது, அவரது கட்டுரையின் தொடக்கம், 1961 பிப்ரவரி 24 ந்தேதி அப்படியொரு தீர்மானத்தைக் காங் கிரஸ் ஆட்சியாளர்கள் கொண்டு வரவே இல்லை. சட்ட சபை நடவடிக்கைக் குறிப்புக்கள் என்ற புத்தகம் (அர சாங்க வெளியீடு) முழுமையும் நான் தேடிப் பார்த்துவிட் டேன். எந்தப் பக்கத்திலும் எந்த வரியிலும் காங்கிரஸ் ஆட்சியின் சார்பில் அப்படியொரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதாகவோ; செரீப்பு குறிப்பிட் டிருப்பதைப்போல அந்தத் தீர்மானத்தை சி. சுப்ரமணி யம் முன்மொழிந்து பேசியதாகவோ; “தமிழ்நாடு வாழ்க!” என்று எல்லா எம். எல். ஏ. க்களும் வாழ்த் தொலி முழங்கியதாகவோ, எந்தக் குறிப்பும் கிடையாது. திரு. சுப்பிரமணியம் அவர்களேகூட கா. மு. ஷெரீப்பின் கடைந்தெடுத்த பொய்யை (ஒப்புக்கொள்ளமாட்டார். ஏனென்றால். சட்டசபைக் குறிப்பேடு அப்படித்தான் கூறுகிறது. ஆனால்! நடந்தது என்ன தெரியுமா நண்பா? 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் நாள் சட்டசபை யில் உத்தியோக பற்றற்ற நாள் (Non Official Day) என்ற நாளில் திரு. பி. எஸ். சின்னத்துரை என்ற பி. சோ. கட்சி உறுப்பினர், “சென்னை ராஜ்யத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.' 99 என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அன்று அவர் பேசிக் கொண்டிருந்தபோதே; உரிய நேரம் முடிந்து விட்டபடியால்; அடுத்த உத்தியோகப்பற்றற்ற நாளில்அவர் பேசலாம் என்று அன்று தலைமை வகித்த துணைச் சபாநாயகர் அறிவித்தார்.