பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 109 அதே நாளில் தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய காங் கிரஸ் உறுப்பினர் கோசல்ராமின் பேச்சில் ஒரு பகுதிதான் மேலே குறிப்பிட்டது! . “தமிழ் நாடு என்று கூறுவதால் எல்லோ ருக்கும் சந்தோஷமாகத் தானிருக்கிறது. அதே மாதிரி “மெட்ராஸ் ஸ்டேட்” என்று சொல்லும் போதும் சந்தோஷமாகத்தானி ருக்கிறது. அப்படி இருந்து வருவதை எதற்காக இப்போது போய்க் கெடுக்க வேண்டும்? கான்ஸ்டிட்யூஷனில் இருக்கிற படி இருக்கட்டும். இங்குமட்டும் தமிழில் போய்க் கொண்டிருக்கட்டும். வெளியார்கள் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே வைத்துக் கொண்டிருக்கலாம். ஆகவே நாம் எடுத்தி ருக்கிற முடிவே நியாயமானது......கனம் அங்கத்தினர் தீர்மானத்தை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் அதை எதிர்க்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும்.' இப்படிப் பதில் கூறியவர் யார் தெரியுமா? அவர் தான் மென்மையான உள்ளமும், இனிமையான புன்ன கையுங் கொண்ட அமைச்சர் வெங்கட்ராமன்! கழகத் தோழர்கள் வெளி நடப்பு! சரவை புறக்கணித்தது. தீர்மானத்தைக் காங்கிரஸ் அமைச் தலைவர் நாவலர் எழுந்து; எதிர்க் கட்சித் “நாங்கள் எவ்வளவோ விளக்கங்களை வினயமாக எடுத்துச் சொல்லியும், பல முறை