பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 / கலைஞர் கடிதம வேண்டுகோள் விடுத்தும், வற்புறுத்திக் கூறியும், அமைச்சரவையும் ஆளுங் கட்சி யும் திட்டவட்டமாக ஏற்றுக் கொள் வதற்கில்லை யென்று குறிப்பிட்ட காரணத் தால் எங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கவும், ஆளுங் கட்சியின் போக்கைக் கண்டிக் கவும் வெளி நடப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" எனக் கூறியதைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். நண்பா! தமிழ்நாடு சட்டசபையில் மட்டுமா காங்கி ரசார் இப்படி நடந்து கொண்டனர்? டெல்லி மாநிலங்கள் அவையிலும் அப்படித்தான் நடந்து கொண்டனர். அது வும் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரசார்! அறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு பெயர் மாற் றத் தீர்மானம் பற்றி டெல்லி மாநிலங்கள் அவையில் வீர உரை ஆற்றிய போது; தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜகோபாலன் (காமராஜரின் நெருங்கிய நண்பர்) அவர் கள் பேசியதைப் படித்துப்பார்! "தமிழ் நாடு பெயருக்காக ஒரு நபர் ண்ணா விரதம் இருந்து உயிரையும் விட் டார். அதற்குப் பிறகும் நாங்கள் தேர்தலில் ஜெயித்தோம். சென்னை ராஜ்யம் என்ற பெயர் இருக்கிறபடி இருக்கட்டும் என்று மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள்.” 99 இதுதான் அவரது பேச்சு! சங்கரலிங்க நாடார் யாரோ ஒரு நபராம்! அவ்வளவு ஆணவம் அவர்களுக்கு!