பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 / கலைஞர் கடிதம் என்றெல்லாம் கூச்சல் கிளப்புகிறார்கள். தமிழ் நாடா? மெட்ராஸ் ஸ்டேட்டா? இருக அதிலே இல்லாத குழப்பம். இதிலே வந்து விட்டதாம்! இலக்கியத்தில் உள்ள இனிக்கும் பெயர்கள் புறநானூற்றில்; “வையக வரைப்பின் தமிழகம்” சிலப்பதிகாரத்தில்; “இமிழ் கடல் வரைப்பின் தமிழகம்” மணிமேகலையில்; “சம்புத் தீவினில் தமிழகம்” பெரிய புராணத்தில்; "நற்றமிழ் நாடு" கம்பராமாயணத்தில்; "தென் தமிழ் நாடு" என்றிருப்பதையெல்லாம் படிக்கக் கேட்கவும் விருப்ப மில்லாதவர்களின் வரட்டுக் கூச்சல்தான்; தமிழகமா? தமிழ் நாடா? குழப்பம்! குழப்பம்! என்பதாகும்! "தமிழ் நாடு" என்று தமிழ்நாட்டிலும் "மெட்ராஸ் 6 ஸ்டேட்" என்று உலகத்திலும் அழைப்பது;